Friday, August 13, 2010

நுரையீரலில் செடி : அமெரிக்காவில் வினோதம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் மாசாசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரோன் ஸ்வீடன். இவருக்கு சமீப காலமாக கடும் இருமல் இருந்து வந்தது. அடிக்கடி கடும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் நிலைமை மோசமாகவே உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ் ரே எடுக்கப்பட்டது. நுரையீரலில் ஏதோ கட்டியிருப்பது போல் தெரிந்தது. அது எந்த மாதிரியான கட்டி என்ற அடுத்துக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் ரோன். கேன்சராக இருக்கக்கூடும் என டாக்டர்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் கேன்சர் டெஸ்ட் முடிவு நெகடிவாக வந்தது. அடுக்கடுக்கான சோதனைகளுக்குப் பிறகு அவர் நுரையீரலில் இருந்தது கட்டி அல்ல ஒரு வேர்கடலை செடி என்பது தெரியவந்தது. ரோன் தன்னையே அறியாமல் நுகர்ந்த ஒரு நிலக்கடலை விதையாகி முளைத்திருந்தது. 1.25 செ.மீ., உயரத்துக்கு அந்த விதை முளைத்து செடியாக மாறியிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் செடி அகற்றப்பட்டு இப்போது ரோன் உடல் நலம் தேறி வருகிறார்

No comments:

Post a Comment